Breaking News

10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் யார் யாருக்கு எந்த துறை முழு விவரம் 10 minister change

அட்மின் மீடியா
0

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ஏற்கெனவே இருந்த அமைச்சர்களின் 10 பேரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன.


தமிழக அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்று உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

அமைச்சர்களின் துறைகள் மாற்றம் யார் யாருக்கு எந்த துறை முழு விவரம் 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரக கடன்கள் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுவனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அதேபோல் சுற்றுலா அமைச்சர் மதிவேந்தன் புதிய வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சி.வி.மெய்யநாதனுக்கு சூற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு

ஆர். காந்தி அவர்களுக்கு கூடுதலாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை, பூதானம் மற்றும் கிராமதானம் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback