Breaking News

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை திடீர் நிறுத்தம் மத்திய அரசு அறிவிப்பு prematric scholarship stopped

அட்மின் மீடியா
0

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை திடீர் என நிறுத்தப்பட்ட்டுள்ளது



கடந்த 2006 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திட்டம்  சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டம். இத்திட்டத்தின் மூலம் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படித்து வந்த லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவர்கள் பயனடைந்து வந்தனர். 

இந்த ஆண்டும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு 1 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பத்துள்ளார்கள் 

இந்நிலையில் இந்த வருடம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாது என்று மத்திய  அரசு திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த உதவித் தொகை 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் (www.scholarshops.gov.in ) விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளிகள் ஆன்லைனில் சரி பார்த்து முடித்து வரும் நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் விண்ணப்பங்களையும் ரத்து செய்து நீக்கி உள்ளது.

இதற்க்கு பல்வேறு கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் விட்டுள்ளார்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback