Breaking News

புதுவித நெட்பேங்கிங் திருட்டு உஷாரா இருங்க... டி.ஜி.பி. சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை வீடியோ Online banking fraud

அட்மின் மீடியா
0

 புதுவித நெட்பேங்கிங் திருட்டு உஷாரா இருங்க... டி.ஜி.பி. சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை வீடியோ

இது குறித்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில்,

பல்வேறு விதமான இணையதள மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடிகளில் மக்கள் சிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது புதிதாக நெட் பேங்கிங் அக்கவுண்ட் மோசடி நடைபெற்று வருகிறது.

உங்கள் போனுக்கு வாடிக்கையாளர் கவனத்திற்கு, உங்களது எஸ்.பி.ஐ. நெட் பேங்கிங் அக்கவுண்ட் இன்றுடன் செயல்படாது. இதை செயல்படுத்துவதற்கு உங்களது பான் நம்பரை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-இல் செலுத்துங்கள்”, என்று ஒரு மெசேஜ் வரும் 

உடனே நீங்கள் பதறி அந்த Linkல் போய் என்ன செய்ய வேண்டும் என பார்ப்பீர்கள்.அதில் உங்கள் பெயர், பான் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கப்படும் . அடுத்து உங்கள் ஏடிஎம் கார்டு நம்பர் உள்ளிட்ட விவரங்களை கேட்ப்படும் . அதன் பின்னர் உங்களுக்கு ஒரு ஓடிபி (OTP) வரும். அந்த ஓடிபிஐ கேட்பார்கள். நீங்கள் ஓடிபியை சொன்னதும் உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.இது பல வருடங்களுக்கு முன் இருந்த மோசடிதான். இப்போது மீண்டும் இந்த மோசடி நடைபெறுகிறது. 

உங்கள் வங்கி கணக்கு மூடப்படும், பான் கார்டு நம்பர், டெபிட் கார்டு நம்பர் கொடுங்கள், வங்கி கணக்கு எண் விவரம் கொடுங்கள் என எந்த வங்கியில் இருந்தும் கேட்கவே மாட்டார்கள்.அப்படி கேட்டார்கள் என்றாலே அவர்கள் மோசடி கும்பல் என அர்த்தம். அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். நீங்கள் பதில் அளித்து Linkல் விவரங்களை கொடுத்துவிட்டால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் போய்விடும்” என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/tnpoliceoffl/status/1595674337172156417

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback