Breaking News

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ தற்காத்து கொள்வது எப்படி...முழு விவரம் madras eye

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் மக்களிடையே தற்போது சளி, காய்ச்சலுடன் சேர்ந்து மெட்ராஸ் ஐ என்கின்ற கண் நோயும் பரவிவருகிறது. எனவே இந்த மெட்ராஸ் ஐ  என்றால் என்ன, மெட்ராஸ் ஐ  எப்படி பரவுகின்றது, சரியாவது எப்படி, தற்காத்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்


 

மெட்ராஸ் ஐ எதனால் ஏற்படுகின்றது:-

கண்ணில் அடினோ வைரஸ் Conjunctiva  என்ற விழி வெண்படலத்தில் ஏற்படும் நோயாகும். இந்த அடினோ வைரஸ் கண்ணில் உள்ள வெண்படலத்தில் அழற்சியை ஏற்படுத்துகின்றது, இதனால் கண்கள் சிகப்பாகின்றது

இந்த மெட்ராஸ் ஐ   பாதிப்பு  சென்னையில் மட்டும் பரவுவதில்லை எல்லா இடங்களில் பரவ கூடியது

மெட்ராஸ் ஐ பெயர் காரணம் :-

இந்தநோய் முதன்முதலில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதால் இதனை மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படுகின்றது

மெட்ராஸ் ஐ   அறிகுறி:-

கண்ணில் உள்ள விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பால் 

கண்களை சுற்றி வீக்கம் ஏற்படுதல்

கண்ணில் நீர் சுரந்து கொண்டே இருத்தல், 

கண்ணில் வலியுடன்  அழுக்கு வெளியேறி  பீழை வருவது

நோயின் அறிகுறி

சரியாவது எப்படி:-

அதிகபட்சம் 3 முதல் 4 நாட்களில் சரியாகிவிடும். 

கண் மருத்துவரின் அறிவுரைப்படி கண்ணில் சொட்டு மருந்து விட்டால் சரியாகிவிடும். 

நேரடியாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி தாங்களே சுய சிகிச்சை செய்து கொள்ள கூடாது.

கண்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்வது சிறந்தது இதனால் பரவுவது தவிர்க்கப்படும்.

மெட்ராஸ் ஐ பரவுவது எப்படி:-

மெட்ராஸ் ஐ  இருக்கும் ஒருவர் தன் கண்ணில் வடியும் நீரை கைக்குட்டையில் துடைப்பது, அதனை டேபிள், சேர், கை வைக்கும் இடங்களில் தடவுவதன் மூலம் அதனை மற்றவர்கள் தொடுவது மூலம்ச்மற்றவர்களுக்கு பரவுகிறது. 

மெட்ராஸ் ஐ வராமல் தற்காத்து கொள்வது எப்படி:-

மெட்ராஸ் ஐ'தங்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அனைவரும் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

சாதாரண குளிர்ந்த நீரில் கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். 

வெளியில் சென்றால் முகம், மற்ரும் ,கண்ணை தொடாமல் வீடு வந்தவுடன் கைகளை சோப்பால் கழுவ வேண்டும் 

மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தினாலும் இந்த நோய் பரவும் 

இது எளிதில் குணப்படுத்தக்கூடிய சாதாரணமான நோய்த் தொற்று என்பதால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் முற்றிலும் குணமாகிவிடும்.

மெட்ராஸ் ஐ - வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன:-

கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவி அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

கண்ணைத் தொட்ட பிறகும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்

.கண்ணில் மருந்து போட்டுக்கொண்டாலோ, கண்ணில் கை வைத்தாலோ உடனடியாக கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

நீங்கள் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது எளிதாகப் பரவும் என்பதால் நீங்கள் பயன்படுத்திய துண்டு, கைக்குட்டை போன்றவற்றை மற்ரவர்கள் தொடாமல் பார்த்து கொள்ளவும்.


pink eye

conjunctivitis symptoms

conjunctivitis eye drops

madras eye symptoms

pinkeye symptoms

symptoms of pink eye

treatment for viral conjunctivitis

viral conjunctivitis treatment

pink eye symptoms

bacterial conjunctivitis treatment

pink eye treatment

symptoms of viral conjunctivitis

madras eye treatment

conjunctivitis treatment eye drops

pink eye drops

what is madras eye

madras eye infection

viral conjunctivitis eye drops

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback