சிசிடிவி குறைபாடுகளை தீர்க்கும் நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என அறிவிப்பு CCTV chennai police
சிசிடிவி குறைபாடுகளை தீர்க்கும் ஹேக்கர்களுக்கு சென்னை காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ள போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் 30.11.2022ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யும் வாகனங்கள் பல நேரங்களில் மங்கலாக தெரிவதால் இந்த நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக சிசிடிவி காட்சியிலிருந்து எடுத்துக் கொடுக்க வேண்டும்
சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் குற்றவாளிகளின் முகம் தெளிவாக மாற்றிக் கொடுக்கும் வகையில் ஒரு போட்டி
இரவு நேரங்களில் அதிக வெளிச்சத்துடன் வரும் வாகனங்களால் சிசிடிவி காட்சியில் நம்பர் பிளேட்டுகள் தெளிவாக தெரிவதில்லை இரவு நேரங்களிலும் நம்பர் பிளேட்டுகளை தெளிவாக தெரியும் வகையில் மாற்றி கொடுக்க வேண்டும்
போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.
https://twitter.com/chennaipolice_/status/1596015898061467648
CCTV chennai police
Tags: தமிழக செய்திகள்