Breaking News

B.C., M.B.C, மாணவா்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

அட்மின் மீடியா
0

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2022-23ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் 


தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கான கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.

கல்லூரியில் பயிலும் பி.வ/மிபிவ/சீம மாணவ/ மாணவியருக்கான அரசின் கல்வி உதவித்தொகையின் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் வாங்கிய கல்வித் தொகையைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 

அதே போல் புதிதாக முதல் முறை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்குப் பெற்றோரது ஆண்டும் வருமானம் ரூ.2,50,000/- ஆக இருக்க வேண்டும்

கல்வி உதவித்தொகையைப் புதுப்பிக்க விண்ணப்பங்கள் 06.12.2022 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

அதே போல் புதிய விண்ணப்பங்கள் 15.12.2022 முதல் தொடங்கும்

https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes. htm # scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்கள் உள்ளது

மேலும் விவரங்களுக்கு:-

https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes

https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback