Breaking News

குலா மூலம் விவாகரத்து பெற கணவரின் அனுமதி தேவை இல்லை கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!absolute right to divorce through Khula

அட்மின் மீடியா
0

 குலா மூலம் விவாகரத்து பெற கணவரின் அனுமதி தேவை இல்லை  கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!


குலா நடைமுறை என்றால் என்ன:-

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.

கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் ஜமாத் தலைவரிடம் முறையிட வேண்டும். கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை. அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் அப்பெண்ணைத் திரும்பக் கொடுக்குமாறு கூறுவார்

அந்த மகர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிடப்படும். மகர் தொகையை கணவனுக்கு திருப்பி கொடுத்த பிறகே அப்பெண்ணுக்கு திருமண முறிவு உத்தரவு கிடைக்கும். 

குலா செய்தது தவறு எனப் பின்னர் அறிந்த பெண், மீண்டும் அதே கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால், அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் 'குலா' முறை செல்லும் என கேரளா உயர் நீதிமன்றம் 2021 ம் ஆண்டு  தீர்ப்பு அளித்துள்ளது

தீர்ப்பு படிக்க:-

https://www.adminmedia.in/2021/04/blog-post_87.html

கேரளாவின் முஸ்லிம் பெண் ஒருவர் தன் கணவரை குலா முறையில் விவாகரத்து செய்துள்ளார். இந்த குலாவை ஏற்காத அவரது கணவர், பெண்களுக்கு தலாக்கை போல் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து அளிக்க உரிமை இல்லை என மறுத்து கேரளாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார், அப்போது அளிக்க பட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பெண் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள் கணவன், மனைவி இருவருக்குமே ஒருதலைப்பட்சமாக விவாகரத்து அளிக்க உரிமை உள்ளது. இதற்க்கு  குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம் பெண்களின் குலா முறை செல்லும்' என தீர்பளித்துள்ளார்


இஸ்லாமிய பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யாமல குலா சட்டம் மூலம் விவாகரத்து பெற அனுமதி வழங்கக்கோரி, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முகமது முஸ்டாக், சி.எஸ்.டயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இஸ்லாமிய பெண்கள் குலா மூலம் விவாகரத்து செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதில் இஸ்லாமியப்பெண்கள் தங்களுக்கு விவாகரத்து வேண்டுமானால், கணவரிடம் தலாக் கூற வேண்டும் என்றும், கணவரின் ஒப்புதல் இல்லாமல் குலாவைப் பயன்படுத்தி தன்னிச்சையாக விவாகரத்து செய்ய பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்கள்வழக்கை விசாரித்த நீதிபதிகள்,


குலா விவாகரத்து முறையில், கணவர்களின் சம்மதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை ,கணவன் மறுப்புத்தெரிவித்தால், பெண்கள் விவாகரத்து பெறுவதற்கான மற்ற சாத்தியக்கூறுகள் பற்றி குரானில் குறிப்பிடப்படவில்லை

ஷரியத் சட்டமான குலாவின் படி, இஸ்லாமியப்பெண் ஒருவருக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்றால், விவாகரத்து அறிவிக்க முடியும் திருமணத்தின்போது தான் பெற்றுக்கொண்ட மஹரை திருப்பித் தர வேண்டும் என்பது கட்டாயம் ஆகும் 

இஸ்லாமியப்பெண் தன் விருப்பப்படி விவாகரத்து செய்ய குலா மட்டுமே சட்டப்பூர்வமான வழி , இஸ்லாமியப்பெண்கள் அதன் மூலம் விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு போட்டு விவாகரத்து வாங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடவேண்டியதில்லை என தீர்பளித்தார்கள்

நீதிமன்ற தீர்ப்பை படிக்க:-

https://lawbeat.in/sites/default/files/2022-11/Kerala%20High%20Court%20Islamic%20Clergy.pdf


Muslim women have absolute right to divorce through Khula 

Kerala High Court Islamic law recognises Khula 

Muslim woman's right to demand divorce

husband's consent not needed Khula absolute

absolute right to divorce through Khula 


Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback