Breaking News

முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் 'குலா' முறை செல்லும் என கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் 'குலா' முறை செல்லும் என கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது


 

குலா என்றால் என்ன?

 

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.

கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

இந்த குலா முறை பற்றி முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் 'குலா' முறை செல்லும் என கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

கேரளாவின் முஸ்லிம் பெண் ஒருவர் தன் கணவரை குலா முறையில் விவாகரத்து செய்துள்ளார். இந்த குலாவை ஏற்காத அவரது கணவர், பெண்களுக்கு தலாக்கை போல் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து அளிக்க உரிமை இல்லை என மறுத்து கேரளாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார், அப்போது அளிக்க பட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பெண் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

 

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள் 

கணவன், மனைவி இருவருக்குமே ஒருதலைப்பட்சமாக விவாகரத்து அளிக்க உரிமை உள்ளது. இதற்க்கு  குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம் பெண்களின் குலா முறை செல்லும்' என தீர்பளித்துள்ளார்

 

தீர்ப்பு பற்றி முழு விவரம் தெரிந்துகொள்ள

https://www.livelaw.in/pdf_upload/x-v-y-391855.pdf


https://www.livelaw.in/news-updates/muslim-woman-has-the-right-to-invoke-extra-judicial-divorce-kerala-high-court-172503

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback