Breaking News

ரஷ்யாவில் சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பு முழு விவரம் Scientists Revive 48,500 Year Old Zombie Virus

அட்மின் மீடியா
0

 ஐரோப்பாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டுபிடித்துள்ளனர்.


ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஏரியின் கீழ் பெர்மா ப்ரோஸ்டில் இருந்து உறை நிலையில் சேகரிக்கப்பட்ட பண்டைய மாதிரிகளை ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள் மேலும் இதுபோன்ற வைரஸ்கள் தாக்கினால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்  பனிப்பாறை உருகுவதால் இந்த வைரஸ் மீண்டும் புத்துயிர் பெற்றால் அது பெரியா பாதிப்பைத் தரும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் காலநிலை பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறை உருகுவதால் இதுபோன்ற வைரஸ் மீண்டும் புத்துயிர் பெற்றால் அது மிகப் பெரிய பாதிப்பைத் தரும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பனிப்பாறை உருகுவதால் நமக்கு இதுவரை தெரியாத வைரஸ்களை கிளப்பிவிடும் ஆபத்துகள் உள்ளன என எச்சரிக்கின்றார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback