Breaking News

நாடு முழுவதும் சுங்க கட்டணம் 40% குறைக்கப்படுகிறது.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் சுங்க கட்டணம் 40% குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளதாக என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்கவும்  சுங்க சாவடிகளை முழுமையாக அகற்றுவது தொடர்பாக ராஜ்யசபாவில் திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பி இருந்தார். 

மேலும் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்கவும்  சுங்க சாவடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் வாகன பதிவின் போதே சுங்க கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தை வசூல் செய்யலாம் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் எம்பி வில்சனுக்கு பதிலளித்துள்ளார். அதனை  மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார் அதில்

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் பொழுதே ஒரு முறை சிரிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.

அதற்கு பதில் அளித்துள்ள மாண்புமிகு அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்கள் பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மாண்புமிகு அமைச்சர் அவரக்ளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைக் சிரிய கட்டணமாக வசூலித்துக்கொள்ள ஆவண செய்யுமாறு மாண்புமிகு அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வில்சன் எம்.பி. கூறியுள்ளார். 

மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அவர்களின் டிவிட்டர் பதிவு

https://twitter.com/PWilsonDMK/status/1593593584044810240

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback