23 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை சென்னை வானிலை மையம் அறிவிப்பு tn weather
வட இலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் வரும் நாலாம் தேதி வரைக்கும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதன்காரணமாக இன்று தமிழகத்தில் கீழ் உள்ள 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .அதன்படி
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
வேலூர்,
ராணிப்பேட்டை,
திருப்பத்தூர்,
சேலம்,
தர்மபுரி,
கிருஷ்ணகிரி
ஆகிய எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும்,
சென்னை,
செங்கல்பட்டு,
விழுப்புரம் ,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
கடலூர்,
பெரம்பலூர்,
அரியலூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
தஞ்சாவூர் ,
மயிலாடுதுறை,
நாமக்கல்,
திருச்சி,
புதுக்கோட்டை
ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
வானிலை ஆய்வு மைய அறிக்கை:-
https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்