Breaking News

குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களில் அபராதம் கட்ட தவறினால் வண்டி ஏலம் விடப்படும்! drink and drive fine

அட்மின் மீடியா
0

குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்த உத்தரவு

14 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்  என போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு


இதுவரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் இனி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வாகன ஓட்டுனர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் செய்யும் மது குடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், சாலை விதிமுறை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவல்துறை, தற்போது புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. 

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுபவர்களுடன் பயணிக்கும் மது குடிக்காத அனைத்து நபர்களுக்கும் 10000 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உட்பட உடன் பயணிக்கும் நபருக்கும், மோட்டார் வாகன சட்ட விதிப்படி வழக்குப்பதிவு மற்றும் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் குடிபோதையில் இருந்து அவர்களுடன் பயணிப்போர் குடிபோதையில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்யப்படும் என்றும் இந்த புதிய விதி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தெரியாத நபருடன் ஆட்டோ, கார்களில் பயணிக்கும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. தெரிந்த ஆட்டோ ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் மது குடித்து இருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும், அதுவே சவாரிக்காக முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆனால், ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் 10 ஆயிரம் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.இந்த அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அப்படி தவறினால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஏலம் விடப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அதிரடியாய் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback