Breaking News

கனமழை காரணமாக 2 நாட்களுக்குபுதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் விடுமுறை

அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக நாளை 04/11/2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது ஆ. நமச்சிவாயம் கல்வித்துறை  அமைச்சர் அறிவிப்பு

 
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
 
சென்னை,தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுவையிலும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்த நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback