நாசா வெளியிட்ட சிரிக்கும் சூரியன் இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம் sun smile
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட சிரிக்கும் சூரியன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாசா ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. சூரியனின் மேற்பரப்பில் உள்ள 2 கரோனல் துளைகள் கண்கள் போலவும் காட்சியளிப்பதுடன் சிமிட்டுவது போன்று காட்சியளிக்கிறது.
மூன்றாவது துறை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை குழியை உருவாக்கி உள்ளது, இதை பார்ப்பதற்க்கு சிரிப்பதுபோல் தோன்றும் இந்த புகைப்படத்தை தான் நாசா பதிவிட்டுள்ளது
கரோனல் துளைகள் என்றால் என்ன:-
சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன.
சூரியப் புயல் என்றால் என்ன?
சூரியப் புயல் என்பது சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் காற்று வெடித்து தீப்பிழம்பாக மாறி அதன் “எல்லிய அயனிச்செறிவு மண்டலம்” (Heliosphere) என்பதை தாண்டி பரவி, அதன் எல்லா கிரகங்களையும் பாதிக்கும் சூரிய சக்தி அலைகள் ஆகும்.
இது குறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில்,
நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வட்டரி, சூரியன் சிரிப்பதை படம் பிடித்துள்ளது. புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என அழைக்கப்படுகின்றன. அவை, வேகமான சூரியக்காற்று விண்வெளிக்கு வெளியேறும் பகுதிகளாகும் என விளக்கி உள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் பல விதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
coronal holes,
dark patches on the Sun,
NASA Sun,
NASA’sSay cheese!,
smiling face’ of the Sun,
solar activities,
Solar Dynamics,
Observatoryspace,
Space & Scream,
Spaceweather.com,
Sun "smilingtweeted NASA'
sultraviolet light
கரோனல் துளைகள்
சிரிக்கும் சூரியன்
சூரியக் காற்று
சூரியன்
சூரியப் புயல்
நாசா
Tags: வெளிநாட்டு செய்திகள்