Breaking News

தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆட்டோ மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது- உயர் நீதிமன்றம் highcour madurai

அட்மின் மீடியா
0

பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது .

நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் 

தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கல்வி நிறுவன வாகன விதிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 

ஆனால் கல்வி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, என தற்போதுவரை தனியார் பள்ளிகளில் முறையாக வாகனங்களை பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. 

எனவே, பள்ளி நிறுவன வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள்,சிறு குழந்தைகளை, பள்ளி மாணவர்களை பள்ளிக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் எவ்வாறு அனுப்புகின்றனர். இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றனர். இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்காது. பள்ளி வாகனங்களுக்கு என பல்வேறு விதிமுறைகள் உள்ளது. ஆனால் ஆட்டோ, ரிக்சாக்கள் மூலம் வரும் வாகனங்களுக்கு என்ன விதிமுறை உள்ளது. 

தனியார் பள்ளி ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாப்பான முறையில் அழைத்து செல்ல, ஒரே மாதிரியான பாதுகாப்பான போக்குவரத்தை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக அனைத்து பள்ளி நிர்வாகத்திற்கும் மாணவர்களின் பாதுபாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் உரிய வழிகாட்டுதலை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.மேலும்  வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

high court of madras,madras high court,motor vehicles act,motor vehicle act,madras high court judgement,chennai high court,section 130 motor vehicle act,section 130 mv act,mv act,madras high court services,madras high court judgement copy,madras high court address,madras high court judgement copy online,mv act,motor vehicle act 130,section 66 of motor vehicle act,motor vehicle act section,the high court of madras,section 66 of mv act,without driving licence mv act section.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback