FACT CHECK குடிப்பதற்க்கு தண்ணீர் கேட்டு கொள்ளை என பரவும் வீடியோ உண்மை என்ன????
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தமிழக பெண்கள் உஷாராக இருக்கவேண்டும், குடிப்பதற்க்கு தண்ணீர் வேண்டும் என்று சொல்லி திருப்பூரில் பெண்ணை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கபட்டன பெண் படுகாயம் எச்சரிக்கை எச்சரிக்கை என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, அந்த வீடியோ தமிழகத்தில் நடந்தது போல் தெரியவில்லை காரணம் அதில் ஹிந்தியில் பேசுகின்றார்கள், எனவே இந்த செய்தி திருப்பூரில் நடந்தது கிடையாது என தெள்ள தெளிவாக தெரிகின்றது
மேலும் இந்த வீடியோ குறித்து தமிழக காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ செய்தி பொய்யானது வதந்தி பரப்பாதீர்கள் என பதிவிட்டுள்ளது
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி