வங்க கடலில் உருவாகும் சிட்டராங் புயல் எப்போது கரையை கடக்கும் எங்கு கரையை கடக்கும் cyclone sitrang
நாளை 20 ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மத்திய வங்க கடலில் வலுவடைந்து புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு SITRANG என தாய்லாந்து பெயரிட்டுள்ளது
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியானது புயல் சின்னமாக உருமாறும் வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறும்.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்கு பகுதியில் நிலைகொள்ளும். இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு SITRANG (சித்ராங்) புயல் என பெயரிட்டுள்ளது.
இந்த சித்ராங் புயல் பாதை இதுவரை கணிக்கப்படவில்லை ஆனால் ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதியில் புயல் கரையில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிய பிறகே இதுபற்றி மேலும் தகவல்களை கணிக்க முடியும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் சிட்ராங் புயல் தீபாவளி கொண்டாட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென்று தெரிகின்றது
புயல் எப்படி உருவாகின்றது:-
சாதாரணமாக
வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன.
எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று
மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த
காற்று ஓடோடி செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள்
உருவாகுகின்றன.
புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்?
பொதுவாக ஓருவருடத்திற்க்கு ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக்கூடும். அவை உருவான நாள், மாதம் ஆண்டு, இடம் ஆகியவற்றை மட்டும் சொல்லும்போது பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம். மேலும் சில புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான நாட்களுக்கு மையம் கொண்டிருக்கலாம். அதேபோல் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்தில் மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்த திசையில் வருகிறது என்பதை வானிலை மற்றும் காலநிலையை ஆய்வு செய்வோர், அறிவியலாளர்கள், பேரிடர் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இம்முறை உதவுகிறது.
ந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை
கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கியது.
Tags: தமிழக செய்திகள்