ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி!! முழு விவரம்
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி!! முழு விவரம்
ஆதார் என்றால் என்ன:-
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்
ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய 12 இலக்க தனித்துவமான அடையாள எண் ஆகும். ஆதாரில் புகைப்படம், முகவரி, உங்களது கருவிழி-ஸ்கேன், கைரேகை மற்றும் உங்கள் பிறந்ததேதி விவரம் இருக்கும்
இந்தியாவில் எங்கிருந்தும் அடையாளம் மற்றும் முகவரிக்கு ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது. ஆதார் விவரங்களை இணையதளத்தில் உள் சென்று நீங்கள் சரி செய்யலாம்.
மேலும் ஆதார் அட்டை தொலைந்திருந்தாலும், அதன் நகல் இல்லாமல்,ஆதார் எண் தெரியாமல் இருந்தாலும் அதன் அவற்றைக் கண்டறிவது மிகவும் எளிதாகும்.
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி!! முழு விவரம்
முதலில் நீங்கள் ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளத்திற்க்கு செல்லவேண்டும் https://uidai.gov.in/
அடுத்து அதில் My Aadhaar என்பதில் Retrieve Lost or Forgotten EID/UID என்பதை கிளிக் செய்யுங்கள் அல்லது https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் ஆதார் எண் அல்லது என்ரோல்மென்ட் ஐடி என்பதில் ஆதார் என்பதை கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் பதிவிட்டு அதில் உள்ள கேப்ட்சாவை பதிவிடுங்கள்
அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஒடிபியை பதிவிடுங்கள்
அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு உங்கள் ஆதாஅர் எண் மெசஜ் வரும்
Tags: முக்கிய செய்தி