Breaking News

கிராம உதவியாளர் பணிக்கு மொபைல் மூலம் விண்ணப்பிப்பது எப்படி!! ஸ்டெப் பை ஸ்டெப் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கிராம உதவியாளர் பணிக்கு மொபைல் மூலம் விண்ணப்பிப்பது எப்படி!! ஸ்டெப் பை ஸ்டெப் முழு விவரம்

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

 



வயது வரம்பு:-

விண்ணப்பதாரர் 30.9.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும்,

பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

கல்விதகுதி:-

05-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க:-

https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07.11.2022

விண்ணப்பிப்பது எப்படி ஸ்டெப் பை ஸ்டெப்:- 

முதலில் உங்கள் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடுங்கள் உங்கள் மதிப்பெண் சான்றிதழில் உள்ளபடி

அடுத்து உங்கள் பெயரை தமிழில் பதிவிடுங்கள்

அடுத்து உங்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் பதிவிடுங்கள்

அடுத்து உங்கள் முகவரி பதிவிடுங்கள்

அடுத்ததாக உங்கள் ஏரியா பின்கோடு பதிவிடுங்கள்

அடுத்ததாக உங்கள் பாலினத்தைத் தேர்ந்தெடுக்கவும் ஆண்/பெண்

அடுத்து தேசியத்தை தேர்ந்தெடுக்கவும் இந்தியர் 

அடுத்ததாக உங்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கவும் 

மேலே உள்ள பட்டியலைத் தவிர வேறு ஏதேனும் இருந்தால் மதத்தின் பெயரை உள்ளிடவும்

அடுத்ததாக உங்கள்  சமூகத்தைத் தேர்ந்தெடுக்கவும்

அடுத்து உங்கள் பிறந்த தேதியைத் தேர்ந்தெடுக்கவும் 

அடுத்து நீங்கள் எந்த ஊரில் பிறந்தீர்கள் என்பதை மாவட்டம், தாலுகா மற்றும் கிராம விவரங்கள்தேர்ந்தெடுக்கவும் 

தொடர்பு விபரங்கள் / Contact Details 

உங்கள் மொபைல் எண்ணை சரியாக பதிவிடுங்கள்

அடுத்து உங்கள் சரியான மின்னஞ்சல் முகவரியை பதிவிடுங்கள்

கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதி விவரங்கள்

அடுத்து உங்கள் கல்வித் தகுதியைத் தேர்ந்தெடுக்கவும் 

அடுத்து நீங்கள் வேறு ஏதேனும் தொழில்நுட்பத் தகுதியை பெற்றிருந்தால் அதனையும் குறிப்பிடவும் 

ஓட்டுநர் திறன் விவரங்கள்

அடுத்து உங்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் என்றால் எஸ் என்பதை தேர்வு செய்யுங்கள்

அடுத்து இருசக்கர வாகனம், கார் ஓட்ட தெரியும் என்றால் அதனையும் குறிப்பிடுங்கள்

அடுத்து ந்க்களிடம் லைசன்ஸ் இருந்தால் ஓட்டுநர் உரிம எண் மற்றும் உரிமம் செல்லுபடியாகும் தேதியை பதிவிடவும்

மற்ற விவரங்கள்  

படிக்கவும் எழுதவும் தெரிந்த மொழிகளின் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்

கிரிமினல் வழக்கு ஏதேனும் இருந்தால் அதன் விவரங்களை பதிவிடவும்

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள்

உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தைப் பதிவேற்றவும்

அடுத்து ஒரு வெள்ளை பேப்பரில் உங்கள் கையொப்பம் இட்டு அதனை பதிவேற்றம் செய்யுங்கள்

அடுத்து உங்கள் இருப்பிடச் சான்றிதழைப் பதிவேற்றவும் 

அடுத்து உங்கள்கல்வித் சான்றிதழைப் பதிவேற்றவும்

அடுத்து உங்கள்ஓட்டுநர் உரிமத்தைப் பதிவேற்றவும் 

அடுத்து உங்கள் சாதி சான்றிதழைப் பதிவேற்றவும்

உறுதி ஆவணம்

 அடுத்து கிழ் உள்ள Declaration I hereby declare that all above information are true மேலே உள்ள அனைத்து தகவல்களும் உண்மை என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்என்பதை கிளிக் செய்து கிழ் உள்ள கேப்ட்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback