துபாயில் கட்டப்பட்ட இந்து கோயில் நாளை முதல் தரிசனததிற்க்கு அனுமதி வீடியோ இணைப்பு
துபாயில் கட்டப்பட்ட இந்து கோயில் - நாளை முதல் பக்தர்கள் வழிபடலாம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் புதிதாக இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டது. இந்த கோவிலை கட்டுவதற்காக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில் கட்டுமான பணிக்கான அடித்தளம் போடப்பட்டது.
துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக கோவிலின் கட்டுமானப்பணிகள் முடிந்து அக்டோபர் 5-ம் தேதி அதாவது நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது.
இந்த கோவிலில் 16 தெய்வ சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அலங்கரிக்கப்பட்ட தூண்கள், முகப்பில் இந்து மற்றும் அரபு வடிவியல் வடிவமைப்புகள் மற்றும் கூரையில் மணிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் கோவிலில் நிறுவப்பட்டுள்ளது.
.துபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிச்லை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்