வெளிநாட்டில் ஐடி வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்-வெளியுறவுத்துறை அமைச்சகம்
வேலைக்காக வெளிநாடு செல்வோர் அங்கு வேலை தரும் நிறுவனங்கள் குறித்தும் வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்தும் நன்கு விசாரித்துத் தெரிந்துகொண்ட பிறகே அந்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
கொரோனா பிரச்சினை வந்த பிறகு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளில் பின்னடைவு ஏற்பட்டது. ஐடி துறையும் வீழ்ச்சியைச் சந்தித்தது. வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி இருந்தாலும் சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கான தேவை மந்தமாக இருந்ததால் ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைந்துபோனது. இதனால் புதிய பணியமர்த்தல்கள், பணி உயர்வு, ஊக்கச் சலுகை போன்றவை மந்தமாகவே இருந்து வருகின்றது இந்நிலையில் பலர் வெளிநாட்டில் ஐடி வேலைக்கு செல்ல துவங்குகின்றார்கள்.இந்நிலையில்
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்கள், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குறித்து அறிய நேரிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அரசு பதிவு பெற்றதா என்பது குறித்து அறிந்த பின்னரே வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்- வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
Tags: இந்திய செய்திகள்