ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய விசா நடைமுறை அமல் முழு விவரம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மேம்பட்ட விசா நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது அதன்படி
கீரின் விசா:-
கீரின் விசா பெற்றவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை அங்கு தங்கலாம். அதை புதுப்பிக்கவும் செய்யலாம்.
கீரீன்விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பான்சர் செய்யலாம்.
கீரின் விசா வைத்திருப்பவரின் அனுமதி காலாவதியாகிவிட்டால், அதை புதுப்பிக்க ஆறு மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும்
தங்கள் குழந்தைகளை 25 வயது வரை தங்களுடன் வைத்திருக்க முடியும். முன்பு இந்த வயது 18 ஆக இருந்தது. திருமணமாகாத மகள் அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இந்த வயது வரம்பு பொருந்தாது.
க்ரீன் விசா வைத்திருப்பவர், தங்கும் கால முடிவில் கூடுதலாக ஆறு மாத கால அவகாசத்தையும் பெறுவார்
பத்து வருட கோல்டன் விசா:
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் எந்த வயதுக்குழந்தைகளையும் ஸ்பான்சர் செய்யலாம்.
கோல்டன் விசா வைத்திருப்பவர் காலமாகிவிட்டாலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் விசா காலம் முடியும் வரை அங்கேயே இருக்க முடியும்.
சுற்றுலா விசா:-
புதிய விதிகளின்படி, சுற்றுலா விசா பார்வையாளர்களை 60 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க அனுமதிக்கும்.முன்னதாக இந்த காலம் 30 நாட்களாக இருந்தது
ஐந்தாண்டு மல்டி விசா பார்வையாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும்
Tags: வெளிநாட்டு செய்திகள்