உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மரணம்...
உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முலாயம் சிங் யாதவ் இன்று உடல் நல குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82 ஆகும்
இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003 ல் இறந்துவிட்டார், இவர்களுக்குப் பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் இவர் மூன்று முறை உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஒரு முறை இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மேதாந்தா மருத்துவமனை தெரிவித்திருந்தது. சிறப்பு மருத்துவா்களைக் கொண்ட குழு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலமானார்
Tags: இந்திய செய்திகள்