காம்பியாவில் 66 குழந்தைகள் இறப்புக்கு இந்திய இருமல் மருந்து காரணமா? உலக சுகாதார அமைப்பு விசாரணை
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் ஹரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ்தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் சிரப்கள்தான் காரணமா என்று உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது.இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை சேர்ந்த, 'மெய்டன் பார்மசிடிக்கல்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மற்றும் சளி, 'டானிக்' அந்த குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்' என தெரிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த, 'மெய்டன் பார்மசிடிக்கல்ஸ்' என்ற நிறுவனம் ஹரியாணாவின் சோனிபட்டில் இயங்கி வருகின்றது
உலக சுகாதார அமைப்பு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
இந்த இளம் உயிர்களின் இழப்பு அவர்களது குடும்பங்களுக்கு மனவேதனைக்கு அப்பாற்பட்ட வலியை ஏற்படுத்தியுள்ளது.
காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இம்மருந்துடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது' என அந்த நான்கு மருந்துகள் அதாவது இருமல் மற்றும் சளி மருந்துகள் இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அந்நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு மேலும் விசாரணை நடத்தி வருகிறது.
அந்த அசுத்தமான மருந்து பொருள்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம். நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் ஆய்வக பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது" என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை படிக்க:-
Tags: இந்திய செய்திகள் எச்சரிக்கை செய்தி முக்கிய செய்தி