Breaking News

எச்சரிக்கை 5ஜி சேவையை பயன்படுத்தி மோசடி காவல்துறை எச்சரிக்கை... முழுவிவரம்

அட்மின் மீடியா
0

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  5 ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். .



இந்நிலையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  தங்களை செல் போன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சிம்கார்டை 4ஜியில் இருந்து 5 ஜிக்கு புதுப்பிக்க உள்ளதாக கூறி உங்கள் மொபைல் போனுக்கு  ஓடிபி எண் வந்துள்ளதாகவும், அதனை கூறும்படியும் கேட்பார்கள். மேலும், தாங்கள் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்து புதுப்பித்து கொள்ளலாம் என்று கூறியும் மக்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிக்கலாம்.எனவே, மக்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை கொடுக்கவோ அல்லது அனுப்பப்பட்ட லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம். நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback