Breaking News

தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்ட கூட்ட நெரிசல் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலி வைரல் வீடியோ South Korea 149 killed in Halloween crowd

அட்மின் மீடியா
0

 தென்கொரியாவில் இறந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் நடந்த ஹாலோவீன் விழாவில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி இறந்தனர். மேலும் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஹாலோவீன் திருவிழா என்றால் என்ன:-

பேய்களுக்கு என்று ஒரு விழாவை  ஹாலோவீன் திருவிழா என்று  அக்டோபர் 31-ம் நாளை ஹாலோவீன் தினமாக மேலை நாட்டினர்  கொண்டாடி வருகின்றனர்


அதன்படி இன்றைய தினம், ஹாலோவீன் தினமாக பேய்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் தென்கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி ஹாலோவீன் எனும் திருவிழா வெகுவிமரிசயைாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஹாலோவீன் விழாவுக்கான ஏற்பாடுகள் தென்கொரியா இடோவான் என்ற இடத்தில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில்ஏற்பாடு செய்யப்பட்டது

இன்று நடந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேர் கூடியிருந்தனர். விழா நடந்த இடம் மிகவும் சிறியது என்ற நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. சியோலில் உள்ள ஹாமில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு குறுகிய சந்தில் ஒரு பெரிய கூட்டம் முன்னோக்கி தள்ளத் தொடங்கிய பின்னர் பொதுமக்கள் ஒவ்வொருவரையும் இடித்து கொண்டே நடந்து சென்றனர். 

இதனால் விழாவில் பங்கேற்ற பலரும் மூச்சுத்திணறி அப்படியே பொத்தென விழுந்தனர். இதை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் கூட்டநெரிசலில் அங்கும் இங்கும் ஓடியதில் கீழே விழுந்து மிதிபட்டார்கள் இதனால் பலர் உயிரிழந்துள்ளார்கள்

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் பொதுமக்கள் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே தான் ஹலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட இந்த சோகம் சம்பவம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. மீட்டு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டதும், கூட்ட நெரிசலில் மயங்கியவர்களை உயிர் காக்க பொதுமக்களே முதலுதவி செய்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது


வீடியோ பார்க்க:-

https://twitter.com/Reuters/status/1586493967637819392

https://twitter.com/worldnews24ru1/status/1586511484728786947

https://twitter.com/YO_ongirl/status/1586478809754136576


HALLOWEEN DAY

149 killed in Halloween crowd crush in SKorea

South Korea 149 killed in Halloween crowd

South Korea

Halloween crowd


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback