12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு கள்ளகுறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம் முழு விவரம் job fair
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.10.2022 சனிக்கிழமை அன்று ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
மேலும், தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் 2020, 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 20 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக ரூ. 16,557-ம், உணவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags: வேலைவாய்ப்பு