Breaking News

தமிழகத்தில் அக்டோபர் 11-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் -காங்கிரஸ் மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக, மதிமுக, உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கட்சிகள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 சமூக நல்லிணக்க மனித சங்கிலி அக்டோபர் – 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும்!என காங்கிரஸ், மதிமுக,கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி,இந்தியயூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவிப்பு



இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்

காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் தேதி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வியக்கத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் பேராதரவு நல்கியிருந்தன.

இச்சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் 02 ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் சமூகத்தில் உருவாகியுள்ள பதற்றமான சட்டம்-ஒழுங்கு சூழலைக் காரணம் காட்டி நாம் நடத்தவிருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர்-02 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விளக்கியதோடு, மனித சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அனைத்து ஆதரவு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களோடு கலந்து பேசிய அடிப்படையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவுமான இந்த மனித சங்கிலி நிகழ்வில் அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டுமென அழைக்கிறோம்.என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback