Breaking News

கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை 01.11.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  2நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


கனமழை காரணமாக  சென்னை  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - சென்னை  மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு 

கனமழை காரணமாக  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை -காஞ்சிபுரம்   மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு 

கனமழை காரணமாக  செங்கல்பட்டு  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை -செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.01) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு திருவள்ளூர்   மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுகன்னியாகுமரி மாவட்டமானது நவம்பர் 1ம் தேதி அன்று தமிழகத்துடன் இணைந்ததால் இந்த தினத்தை நினைவு கூறும் பொருட்டு அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறிப்பு: 

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

01.11.2022 ம் தேதி:-

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்க திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.11.2022 ம்தேதி:-

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback