Breaking News

FACT CHECK இந்த பூச்சி கடித்தால் 5 நிமிடத்தில் மரணம் என பரவும் செய்தி உண்மை என்ன!!!

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பருத்தி வயலில் ஒரு பச்சை ஓட்டம் வருகிறது. கடித்த ஐந்தே நிமிடங்களில் இறந்து போனது கர்நாடகாவில் நடந்தது. இது பாம்பை விட விஷ பூச்சி. வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் பகிரவும். குறிப்பாக விவசாயிகளுக்கு எனக்கு தெரியப்படுத்துங்கள் ப்ளீஸ் மை ஹெல்ப்..  என்று  சில புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படங்கள் குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்படங்களை ஆராய்ந்தது, மேலும் அந்த புகைப்படங்களை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் 

வாட்ஸப்பில் கடந்த சில நாட்களாக இந்த பூச்சி கடித்தால் 5 நிமிடத்தில் மரணம் அடைந்து விடுவார்கள் என பரவும் செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம் என ஆந்திராவில் வேகமாக பரவிய செய்தியை அடுத்து அதன் உண்மை தன்மையை ஆந்திரா தூர்தர்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அதில் 

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படத்தில் உள்ள பூச்சி nettle moth worm என்ற பூச்சி இனத்தை சேர்ந்தது ஆகும்

அது சாதரண கம்பளி பூச்சி இனத்தை சார்ந்தது ஆகும், மேலும் இந்த பூச்சி இனங்கள் அதிகமாக கரும்பு பயிரில் அதிகம் கானப்படும்

மிக முக்கியமாக இந்த பூச்சி கடித்தால் யாரும் சாக மாட்டார்கள், இந்த பூச்சி கடித்தால் சிறுது நேரம் அறிப்பு மட்டுமே ஏற்படும் என மேலும் தன் டிவிட்டர் பக்கத்தில் கடந்த 16.09.2022 அன்று தெரிவித்துள்ளது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 




 
 
முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://twitter.com/DDNewsAndhra/status/1570809350259900416


அந்த பூச்சி பற்றி விக்கி பீடியாவில்

https://en.wikipedia.org/wiki/Parasa_lepida


அந்த பூச்சி பற்றி கூகுள் இமேஜ் சர்ச்சில்


https://www.google.com/search?q=nettle+moth+worm&sxsrf=ALiCzsb7U_FgfxMFARKU7Funp3ooLftMJQ:1663550435857&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwjv8q2m2J_6AhXlUGwGHR9TArkQ_AUoAXoECAEQAw&biw=1396&bih=678&dpr=1.38

 

https://www.youtube.com/watch?v=Pp3nzOYMWfM

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback