சென்னை மூழ்குமா!!! காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கை முழு விவரம்...
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாறுபாடு பிரச்சினையை எதிர்கொள்ள கடந்த 2005 அக்டோபரில் தொடங்கப்பட்ட ‘சி40 மேயர்கள்’ அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.
இந்த அறிக்கையில் சென்னையில் உயர்ந்து வரும் கடல்மட்டத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நகரின் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரக்கூடும். அவ்வாறு உயர்ந்தால் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும். சென்னையில் கடல் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அடுத்த 100 ஆண்டுகளில் 68 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை சந்திக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள்,
ஆற்றல் திறன்வாய்ந்த கட்டுமானங்கள்,
போக்குவரத்து,
நிலையான கழிவு மேலாண்மை,
நகர்ப் புறங்களில் வெள்ளம் மற்றும் தண்ணீர் நெருக்கடியை சமாளித்தல்,
பாதிக்கப்படும் மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம்
ஆகிய 6 துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காலநிலை மாற்றத்தின்
தாக்கங்களை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்திட்ட அறிக்கை
தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அக்டோபர் 26-ம் தேதிக்குள் இது தொடர்பான கருத்துகளை chennaiclimateactionplan@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கை
https://chennaicorporation.gov.in/gcc/pdf/CCAP_GCC_CSCL_Website.pdf
Tags: தமிழக செய்திகள்