மொபைல் பேங்கிங் மூலம் பரவும் புது வைரஸ் சோவா வைரஸ் என்றால் என்ன.. முழு விவரம்
இந்தியாவின் இணையவழி குற்றங்களை கண்டறியும் இந்திய கணினி அவசரகால பதில் குழு (Indian Computer Emergency Response Team) தற்போது சோவா என்னும் புதிய வைரஸ் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை சோவா வைரஸ் குறிவைத்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை தனது இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளதாக இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (CERT-In) எச்சரித்துள்ளது.
இந்த சோவா எனும் புதிய வைரஸ் மூலமாக இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் திருடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தப்பிப்பது எப்படி:-
உங்கள் மொபைல் போனில் தேவையற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்யாமல் இருக்கவேண்டும்
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிகாரப்பூர்வமான ஆப்களை மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்
Tags: தொழில்நுட்பம்