Breaking News

தமிழகத்தில் 282 பேருக்கு இன்புளுன்ஸா காய்ச்சல் காதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

அட்மின் மீடியா
0
தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இன்று சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்து விசாரித்து காதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 

சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 282 ஆக உள்ளது. 

எச்1என்1 காய்ச்சல் பரவல் காரணமாக 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி ஆகியவை இன்புளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகள் விலகி இருக்க வேண்டும் எனவும் தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் இன்புளுயன்சா காய்ச்சலானது இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியாகும் நீர் திவலைகள் வழியாக பரவுகிறது எனவும் கொரோனா தாக்கத்துக்கு பிறகு தற்போது மீண்டும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 282 பேருக்கு இன்புளுன்ஸா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback