Breaking News

உலகில் முதன் முதலாக சீனாவில் குளோன் செய்யப்பட்ட ஓநாய் புகைப்படங்கள்

அட்மின் மீடியா
0

சீன விஞ்ஞானிகள் உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட ஓநாயை உருவாக்குகியுள்ளனர்.

 

சீனாவில் உள்ள பெய்ஜிங்கைச் சேர்ந்த மரபணு நிறுவன விஞ்ஞானிகள், ஒரு காட்டு ஆர்க்டிக் ஓநாயை உலகில் முதல் முறையாக வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர்.

 

இது குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள்

உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட காட்டு ஆர்க்டிக் ஓநாயை, பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட மரபணு நிறுவனத்தின் ஆய்வகத்தில் பிறந்தது 

இந்த ஓநாய் பிறந்து 100 நாட்களுக்குப் பிறகு தற்போது அதன் புகைப்படத்தை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள்

மேலும் இந்த குளோன் அரிய மற்றும் ஆபத்தான விலங்குகளின் இனப்பெருக்கத்தில் குளோனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மைல்கல்லைக் குறிக்கிறது. 

மற்றொரு குளோன் செய்யப்பட்ட ஆர்க்டிக் ஓநாய் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது






Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback