Breaking News

63 ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவு

அட்மின் மீடியா
0

 63 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு



ஆபாச இணையதளங்கள் 63ஐ முடக்க மத்திய அரசு இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

நாட்டில் 63 ஆபாச இணைய தளங்களை முடக்க இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 63 ஆபாச இணைய தளங்களை புனே ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப (வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021-ன்படி, விதி 3(2)(b) மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவுக்கு இணங்கவும், மேலும் குறிப்பிடப்பட்ட அந்த இணைய தளங்களில் ஆபாசமான தகவல்கள் வெளியாகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இணைய தளங்களை முடக்குவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை செப்டம்பர் 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback