பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை மத்திய அரசு அறிவிப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை என மத்திய அரசு அறிவிப்பு மேலும் அதன் துணை அமைப்புகளுக்கும்அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு தடை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அறிவிப்பு
அண்மையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதன் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடந்திருந்தது. என்ஐஏ சோதனை தொடர்ந்து டெல்லி, குஜராத், அசாம் உள்ள எட்டு மாநிலங்களில் மாநில போலீசாரம் பிஎஃப்ஐ அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தேசிய விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்1967 பிரிவு-3 ஆகியவற்றின் அடிப்படையில் பிஎப்ஐ அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊபா தடை சட்டத்தின் கீழ் PFI மற்றும் அதன் தொடர்புடைய இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்
ரெகப் இந்தியா பவுண்டேஷன் (RIF),
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI),
அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC),
தேசிய மனித உரிமைகள் அமைப்பு (NCHRO),
நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட்,
ஜூனியர் ஃப்ரண்ட்,
எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன்
மற்றும் ரிஹாப் பவுண்டேஷன் கேரளா போன்ற அமைப்புகளும் தடை விதிக்கப்பட்டு மத்திய அரசு அரசானை வெளியிட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்