பஞ்சாப்பில் 50 பேருடன் ராட்டினம் ஒன்று 50 அடியில் இருந்து அறுந்து விழும் வீடியோ காட்சிகள்
அட்மின் மீடியா
0
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ராட்டினம் ஒன்று 50 அடியில் இருந்துஅறுந்து விழும் வீடியோ காட்சிகள்
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தசரா மைதானத்தில் நடைபெற்ற மொஹாலி வர்த்தக கண்காட்சி கண்காட்சியின் போது, டிராப் டவர் ஊஞ்சல் இடிந்து விழுந்ததில் சுமார் 50 பேர் காயமடைந்தனர்.
கண்காட்சியில் இரவு 9 மணியளவில் டிராப் டவர் ஊஞ்சல் சுமார் 50 அடி உயரத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மிக வேகமாகச் கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர்,
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
Tags: வைரல் வீடியோ