அக். 24 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது!
குறிப்பிட்ட ஐபோன் மாடல்களில் வாட்ஸ்ஆப் விரைவில் தனது சேவையை நிறுத்தவுள்ளது என அறிவித்துள்ளது.
இதில் குறிப்பாக iOS 10, iOS 11 இடம்பெற்றிருக்கும் போன்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வைத்துள்ள மாடலும் இந்தப் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆப்பிளின் சமீபத்திய அப்டேட்டினால் வருகிற அக்டோபர் 24 முதல் ஐஓஎஸ் 10 (iOS 10) மற்றும் ஐஓஎஸ் 11(iOS 11) மென்பொருள் தளங்களில் வாட்ஸ்ஆப் இயங்காது.ஐபோன் 5, ஐபோன் 5C, ஐபோன் 6 , ஐபோன் 6S ஆகமாடல்களுக்கு மட்டுமே மேற்கூறிய அப்டேட் பொருந்தும். ஏனென்றால் இந்த போன்கள் மட்டுமே அடிப்படை இயங்குதளமாக iOS 10 மற்றும் iOS 11இல் இயங்கி வருகிறது.மற்ற போன்களில் அடுத்தடுத்த அப்டேட்களின் மூலம் iOS 12 இயங்குதளமானது பயன்பாட்டில் உள்ளது.
எனவே மேற்கூறப்பட்டுள்ள இரண்டு மாடல்கள் போன்களை வைத்திருக்கும் பயனாளர்கள் உடனடியாக தங்களது ஐபோன்களில் செட்டிங்ஸ் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் டேப் செய்து போன்களில் உள்ள இயங்குதளத்தை அப்டேட் செய்யவேண்டும்.
ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி ஆகிய மாடல்களில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இவ்விரண்டு மாடல்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும்.இதைப் பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்ஆப் எச்சரிக்கை செய்தியினை அனுப்பி வருகிறது.
மேற்குறிப்பிட்ட பயனர்கள் வாட்ஸ்ஆப் பயன்பாட்டைத் தொடர்ந்து பயன்படுத்த, அவர்களின் ஐபோன்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். ஐபோன் பயனர்கள் ஐஓஎஸ் 12( (iOS 12) அல்லது அதற்கு அடுத்த மென்பொருளை அப்டேட் செய்திருக்க வேண்டும்.அதுபோல ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆண்ட்ராய்டு 4.1 (Android 4.1) அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
Tags: தொழில்நுட்பம்