Breaking News

இன்றும் நாளையும் 23 மாவட்டங்களுக்கு கன மழை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இன்றும் நாளையும் 23 மாவட்டங்களுக்கு கன மழை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பில்:-

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி‌ காரணமாக,

26.09.2022 முதல்‌ 28.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 

நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்‌சி, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

29.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

30.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வானிலை ஆய்வு மைய அறிவிப்பு:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback