11,12ம் வகுப்பு மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை 15-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்
அட்மின் மீடியா
0
11,12ம் வகுப்பு மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை 15-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
மாணவ, மானவிகள் பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வழங்கப்பட்டது தற்காலிக சான்று மட்டுமே. இந்த தற்காலிக சான்றிதழைக் கொண்டு மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்