Breaking News

தாட்கோ மூலம் 3 மாதம் இலவசபயிற்சி - அடுத்து 70,000 சம்பளத்தில் பணி ...முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் (Life Science) முடித்த மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக Medical Coding Training குறுகிய கால பயிற்சியாக அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.




கல்விதகுதி:-

இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் 


பயிற்சி:-

தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் 

பயிற்சிக்கான கட்டணத் தொகை 15,000/- ரூபாயை தாட்கோ நிறுவனம் வழங்கும்

பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு பெற்ற மாணக்கர்களுக்கு ISO தரத்துடன் கூடிய சான்றிதழ் அளிக்கப்படும்.

வேலை வாய்ப்பு:-

பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணக்கர்களுக்கு நேர்முக தேர்வின் மூலம் நூறு சதவீதம் மருத்துவத் துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்றும் வேலையில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்தபடியே அந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்ளலாம் 

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ12,000/- முதல் ரூ,15,000/-வரை பெறலாம் 

பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ,50,000/- முதல் ரூ.70,000/-வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத ஊதியமாக பெறலாம் 


விண்ணப்பிக்க:-

http://iei.tahdco.com/med_reg.php


மேலும் விவரங்களுக்கு:-

http://tahdco.com/registration-for-medical-coding-training-with-placement-programme-for-b-sc-life-science-students/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback