Breaking News

2 வருடங்களுக்கு பிறகு காபாவைத் தொடுவதற்கும், ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதற்கும் இன்று முதல் அனுமதி... முழு விவரம்

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக புனித காபாவை சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.



இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள புனித இல்லமான காபாவைத் தொடுவதற்கும், ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதற்கும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கொரோனா பெருந்தொற்று காரணமாக, காபாவைத் தொடுவதற்கும், ஹஜரல் அஸ்வத் கல்லை முத்தமிடவும் தடை விதிக்கப்பட்டு, அந்தப் பகுதிகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டிருந்தன. தற்போது தடுப்புகள் அகற்றப்பட்டு, புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

ஹஜருல் அஸ்வத் கல்

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள காபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்

இந்தக் கல் முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபியினால் கிபி 605 ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.[2]

முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் காபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback