Breaking News

குஜராத் கலவரம்.. நாட்டை உலுக்கிய கர்ப்பிணி பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார சம்பவம்! 11 குற்றவாளிகளும் விடுதலை..

அட்மின் மீடியா
0

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது குஜராத் அரசு

 


குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 2002 பிப்ரவரியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டி எரிக்கப்பட்டது. இதையொட்டி வெடித்த மோசமான கலவரத்தில் 790 இஸ்லாமியர்கள் உட்பட 1,044 பேர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானோ (19) என்ற கர்ப்பிணி பெண் 03.03.2002 அன்று  தனது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 15 பேருடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு வயலில் தஞ்சம் அடைந்தார். 

அப்போது 20க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். மேலும், பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானோவின் மூன்று வயது மகள் சலேஹாவை பாறையில் முட்டி கொடூரமாக கொன்றனர். மற்ற 6 பேர் உயிரை காப்பாற்றிக்கொண்டு தப்பினர்.இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ெரும் பரபரப்பை ஏற்படுத்திய  இந்த சம்பவத்தை  சிபிஐ விசாரணைசெய்தது மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 பேர் 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஜனவரி 21, 2008 அன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானோவை கூட்டு பலாத்காரம் செய்தது, குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.மேலும், பில்கிஸ் பானோவுக்கு 50 லட்சம் இழப்பீடு, வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா தனது தண்டனையை ரத்து செய்யக் கோரியும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரியும் குஜராத் உயர் நீதிமன்றத்த்தில் மனுதாக்கல் செய்திருந்தார்அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த குற்றவாளியின் தண்டனையை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்பிறகு குஜராத் அரசு சிறப்பு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட கலெக்டர் சுஜல் மயாத்ரா நியமிக்கப்பட்டார் அந்த குழு, மேற்கண்ட 11 பேரை விடுதலை செய்யலாம் என அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கிய குஜராத் அரசு நேற்று அவர்களை விடுதலை செய்துள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback