Breaking News

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு!உடற்சோர்வு காரணமாக பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்



தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தமிழக முதல்வர் டிவிட்டர்:-



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback