Breaking News

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

அட்மின் மீடியா
0

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக அவதி அடைந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய உறவினரைப் பார்க்க சென்ற நிலையில், தனக்கும் இந்த அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். உடனடியாக அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருகின்றார்

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ் ஆகியோரும் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பன்னீர்செல்வமும் கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback