சிறுபான்மையினருக்கு தொழில் துவங்க சிறப்பு கடன் முகாம் .... முழு விவரம்
அட்மின் மீடியா
0
விருதுநகர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக, சிறுபான்மையினருக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம்கள் நடக்கின்றன.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகமான 'டாம்கோ' சார்பில், பல்வேறு திட்டங்களில் கடனுதவிகள் சிறுபான்மையினர்களுக்கு வழங்கப்படுகின்றன.
சிறுபான்மையினர் தொழில் செய்ய புதிய தொழில் துவங்க தாலுகா வாரியாக, சிறப்பு கடன் வழங்கும் முகாம்கள் நடக்கின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையினர் இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் உங்கள் பகுதி தாசில்தார் அலுவலகம் சென்று உங்கள் பகுதியில் கடன் முகாம் என்று நடத்தபடுகின்றது என்ற விவரம் தெரிந்து கொள்ளுங்கள்....
தமிழ்நாட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவை சார்ந்த சிறுபான்மையின மக்கள், சுயதொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்திற்க்கு ஆன்லைன் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம்
கடன் பெற தகுதியுடையோர்
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவை சார்ந்த சிறுபான்மையின மக்கள்,
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 60 வயது
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை நகல்,
- ஜாதி சான்றிதழ்,
- பள்ளி மாற்று சான்றிதழ் நகல்,
- வருமான சான்றிதழ் நகல்
- திட்ட அறிக்கை
- குடும்ப அட்டை நகல்
- கடன் பெறும் தொழில் குறித்த விபரம்
- ஓட்டுநர் உரிமம் ( போக்குவரத்து வாகனக் கடனாக இருந்தால்
தமிழக அரசின் சிறுபான்மையினருக்கு கடனுதவி ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
Tags: தமிழக செய்திகள்