பீச் ரிசார்ட்டில் திருமணத்தில் வந்த கடல் பேரலை வீடியோ...
அட்மின் மீடியா
0
அமெரிக்காவை சேர்ந்த டிலான் மற்றும் ரிலே மர்பி என்ற ஜோடி கடற்கரையில் தங்கள் திருமண வரவேற்பை கொண்டாட விரும்பியுள்ளனர்.
ஹவாய் தீவில் அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து விருந்தினர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மெக்சிகோவின் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டிருந்த டார்பி புயல் எதிரொலியாக ஹவாயின் கைலுவா - கோனா பகுதியில் உள்ள கடற்கரையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குள் திடீரென ஆக்ரோஷமாக கடல் அலைகள் புகுந்தன. அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தும் கடல் அலையால் கவிழ்ந்தது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ