இஸ்லாமியரையும், கிறுஸ்தவர்களையும் ஏன் கூப்பிடவில்லை இது திராவிடமால் ஆட்சி அனைவருக்கும் பொதுவானது - திமுக எம்.பியின் வைரல் வீடியோ
தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரி. அங்கே மத்திய ,மாநில அரசின் பங்களிப்புடன் ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்க இருந்திருக்கின்றன.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் சென்றிருக்கிறார் அங்கே பணியை தொடங்குவதற்கு முன்பாக இந்து மத முறைப்படி பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அதனை பார்த்து கொதித்து எழுந்த செந்தில்குமார் எம்பி இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடம் கிடையாது. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா?
பூஜை செய்துதான் நடத்த வேண்டும் என்றால் இந்து மதத்தினரை மட்டும் வச்சு ஏன் நடத்துகிறீர்கள்? முஸ்லீமை கூப்பிடுங்கள், கிறிஸ்தவர்களை கூப்பிடுங்கள். கடவுளே இல்லை என்று சொல்லும் திராவிடர்களையும் கூப்பிடுங்கள். எல்லாரையும் அழைத்து இதை செய்யுங்கள் இது திராவிட மாடல் ஆட்சி. எல்லோருக்கும் பொதுவானது என்றார் மேலும் இந்த சம்பவம் நடந்ததை வீடியோவாக தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/DrSenthil_MDRD/status/1548242111220584448
Tags: அரசியல் செய்திகள் வைரல் வீடியோ