Breaking News

மின் கட்டணம் உயர்வு முழு விவரம்... பட்டியல் இணைப்பு

அட்மின் மீடியா
0

 தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு




மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த  மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்

கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ₹12,647 கோடி உயர்ந்துள்ளது மேலும் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது ஏற்கனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும்  எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கட்டணம் மாற்றப்பட்டுள்ளது

  • முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் அதில் எந்த மாற்றமும் இல்லை 

  • ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படும

  • கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்

101-200 யூனிட வரை பயன்படுத்தும் மின்நுகர்வோர்களுக்கு (26,73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்கிறது.

201-300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 72.50 உயர்கிறது

301-400 யூனிட்டுகள் வரை யன்படுத்தும் மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்கிறது

500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்கிறது.

501-600 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்கிறது.

700 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்கிறது.

 800 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.395 உயர்கிறது.

900 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.565 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது குடிசை விவசாயம் கைத்தறி, விசைத்தறி மற்றும்வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின் கட்டணம் உயர்வு முழு விவரம்.... Download Pdf


https://drive.google.com/file/d/1B6zlyGsF0DFjofBynGavZS6f0LR8Gy7A/view?usp=sharing





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback