தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்
கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ₹12,647 கோடி உயர்ந்துள்ளது மேலும் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது ஏற்கனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும் எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கட்டணம் மாற்றப்பட்டுள்ளது
- முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் அதில் எந்த மாற்றமும் இல்லை
- ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படும்
- 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம்
- மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்தி பரிசீலனை
- விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம்
- கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்
Tags: தமிழக செய்திகள்